பிகினி மொடலுக்கு நேர்ந்த பரிதாபம்

March 07, 2017

அமெரிக்காவை சேர்ந்த பிகினி மொடல் ஒருவருக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறித்த சோகக்கதையை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Vicki Perez என்பவர் பிகினி மொடலாக இருந்ததால் ஜிம்முக்கு தினந்தோறும் சென்று தனது உடல் எடையை பிட்டாக பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட திடீர் நோயால் உடல் எடை அதிகரித்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

தனது நிலைமை குறித்து இவர் கூறியதாவது, ஜிம்முக்கு செல்வது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் கட்டுக்கோப்பாக உடலை பராமரித்து வந்த எனது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தேன்.

எனது உடல் எடை 58 கிலோவிலிருந்து 78 கிலோவாக அதிகரித்தது. மேலும் எனது கால்கள் விகாரமாகி ஆண்கள் அணியும் ஷீவை பயன்படுத்த ஆரம்பித்தேன்.

மேலும், எனது முகமும் சற்று தடித்து மற்றும் கை மற்றும் கால்கள் தளர்ந்து போனது. இருப்பினும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை நிறுத்தவில்லை.

நாட்கள் செல்ல, எனது கைகள் தடிக்க ஆரம்பித்து, என்னால் சுவாசிக்க இயலவில்லை. இதனால் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ததில், எனது தலையில் மூன்று கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், இரண்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுவிட்டன. முன்பு போன்று என்னால் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. இருப்பினும் ஓரளவு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

தற்போது, வீட்டில் இருந்தபடி எனது மகனை பராமரித்து வருகிறேன். ஆனால் என்னுடய நிலமையை பார்த்து எனது மகன் பரிதாப்படுகிறான் என்று கூறியுள்ளார்.

 

கனடா