பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கைது

April 09, 2016

இயக்குனர் சங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இன்னும் பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அவரை காலாவதியான விசா வைத்திருந்தாக கூறி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2 மணி நேரத்திற்கு மேலாகஅவரை காக்கவைத்த விமானநிலைய அதிகாரிகள், பிரச்சனையை சரிசெய்த பிறகு அவரை விடுவித்துள்ளனர்.

அத்துடன் அக்ஷய் குமாரினை விமான நிலையத்தில் கண்டதும் ரசிகர்கள் கூட்டமாக கூடிவிட்டதாகவும், அதனால் அங்கு இருந்த 2 மணி நேரமும் அக்ஷய் குமார் ரசிகர்களோடு செல்பி எடுப்பதிலேயே நேரம் கடந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சினிமா