பான் கீ-மூனின் சகோதரர் மீது இலஞ்ச குற்றச்சாட்டு!

January 11, 2017

இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ-மூனின் உறவினர்கள் மீது அமெரிக்க வழக்கறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக அரச அதிகாhரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இடைத்தரகர் ஒருவர் ஊடாக மத்திய கிழக்கு அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்ததாக பான் கீ-மூனின் இளைய சகோதரர் மற்றும் மருமகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கட்டடத் திட்டமொன்றை கொள்வனவு செய்வதற்காக குறித்த இருவரும் அரச நிதியை பயன்படுத்தி மேற்படி அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பான் கீ-மூனின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள இந்த கையூடல்கள் தொடர்பில் மூன் அறிந்திருக்கவில்லை என அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு முதல் 2016 வரை ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த பான் கீ-மூனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அப்பதவிக்கு போர்த்துக்கலின் முன்னாள் பிரதமர் அன்தோனியோ குத்ரஸ் நியமிக்கப்பட்டு கடந்த ஜனவரி முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலகம்