பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!

July 26, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கருப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த உத்தரவைஇ இன்ற பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.பலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் இயக்கம்இ தொடர்ந்தும் தடைப்பட்டியலில் நீடிக்கின்றது.

2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர்இ அந்த அமைப்பு தொடர்பில் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளும் பதிவாகாத நிலையில்இ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகஇ ஐரோப்பிய ஒன்றியம்இ நீதிமன்றில் எடுத்துக்காட்டியுள்ளது.

2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் பென்டகன் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து பயங்கரவாத தடைப்பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்திருந்தது.அத்துடன் இறுதியாக கடந்த ஜனவரிமாதம் அந்தப் பட்டியல் புதுப்பிக்கப்பட்டிருந்தது.இந்தத் தடைப்பட்டியலில் 13 பயங்கரவாதிகள் மற்றும் 22 பயங்கரவாத அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஈழத்தீவு