பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் நபர் எரித்துக் கொலை: பின்னணி காரணம்?

October 28, 2016

அவுஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஸ்பேன் பஞ்சாபி சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பாடகரான 29 வயது Manmeet Alisher என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த மர்ம நபர் ஒருவர் பயணிகளுக்கு முன்னிலையில் Manmeet Alisher மீது ரசாயன பொருளை வீசி தீ வைத்து எரித்துள்ளார், இதில் Manmeet Alisher பலியாகியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக பேருந்து தீப்பிடிப்பதற்கு முன்னதாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 48 வயதான குற்றவாளியை பேருந்து நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

அவுஸ்திரேலியா