நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்-37 பெண்கள் கடத்தல்!

July 04, 2017

நைஜீரியா நாட்டில் 37 பெண்களை கடத்திச் சென்ற போக்கோ ஹரம் தீவிரவாதிகள் ஒன்பது பேரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். கடந்த எட்டாண்டுகளாக இவர்களின் கொலைவெறிக்கு சுமார் 20 ஆயிரம் மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

இதுதவிர, இவர்களின் வெறியாட்டத்தால் வீடுகள் மற்றும் இதர சொத்துக்களை பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அந்நாட்டு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்கு எல்லையோரப் பகுதியான டிஃபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த 37 பெண்களை கடத்திச் சென்றனர். மேலும், அவர்களை தடுக்க முயன்ற ஒன்பது பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று விட்டனர் என டிஃபா மாகாண கவர்னர் லாவ்அலி மஹாமனே டன் டானோ இன்று தெரிவித்துள்ளார்.

உலகம்