நேரலையில் பகல் கனவு கண்ட செய்தி வாசிப்பாளர்: வைரலாகும் வீடியோ

April 10, 2017

அவுஸ்திரேலியாவில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையில் பகல் கனவு கண்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ABC 24 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் Natasha Exelby.

இவர், நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென மெய்மறந்து தனது கையில் உள்ள பேனாவை உற்றுபார்த்தவாறு அமர்ந்திருந்துள்ளார்.

சிறிது நிமிடங்களுக்கு பிறகு நேரலையில் இருப்பதை உணர்ந்த அவர், சுதாரித்துக்கொண்டு செய்தியை வாசித்து முடித்துள்ளார்.

நேரலையின் போது பகல் கனவு கண்ட இவரது செயல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Videos: 
அவுஸ்திரேலியா