நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி: டிரம்பை கடுமையாக சாடிய ஹிலாரி

April 01, 2017

சர்வதேச சுகாதார, வளர்ச்சி திட்டங்களை பட்ஜெட்டில் நீக்கியது டொனால்டு டிரம்ப் செய்த மிகப்பெரிய தவறு என ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்து தனது முதல் பட்ஜட்டை தாக்கல் செய்தார்.

அதில் அரசு துறை வெளிநாட்டுக்கு உதவும் சலுகைகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. அதே போல சர்வதேச சுகாதார, வளர்ச்சி திட்டங்களின் சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.

அதே சமயத்தில் பாதுகாப்பு துறைக்கு அதிக சலுகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய ஹிலாரி கிளிண்டன், சுகாதார துறையில் டிரம்ப் செய்திருக்கும் மாற்றம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அடியாகும்.

இது நமது நாட்டின் பாதுகாப்பை உலக நாடுகள் மத்தியில் குறைத்து காட்டி விடும் என கூறியுள்ளார். இது நமக்கு எச்சரிக்கை அலாரம் எனவும் தெரிவித்துள்ளார்.

கனடா