தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்

April 06, 2018

தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐதேக தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுக்காலை காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

இங்கு உரையாற்றிய பிரதமர்;

தனக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிக்க துணை நின்ற கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.

‘என்னைப் பதவி கவிழ்ப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரின் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தைப் பதவி கவிழ்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ஐதேக அடைந்துள்ள மிகப்.பெரிய வரலாற்று வெற்றி இது.

ஒற்றுமையின் மூலம் வெற்றி பெறலாம் என்பதை காட்டியிருக்கிறோம். இனி அடுத்ததாக, மாகாணசபை, நாடாளுமன்ற, அதிபர் தேர்தல்களுக்கு தயாராக வேண்டும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் திசைதிருப்பல்களுக்கு அகப்படாமல், ஒற்றுமையுடன் தேர்தல்களுக்கு தயாராக வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்

ஈழத்தீவு