தெறிக்கும் தெறியால் தெறித்து ஓடிய மக்கள்

April 18, 2016

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சேலத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது. நடிகர் விஜய் நடித்த தெறி படம் தமிழ் புத்தாண்டு அன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் தெறி திரையிடப்பட்டுள்ள ஒரு திரையரங்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக வசூலிக்கப்படும் ரூ. 50க்குப் பதில் ரூ. 200 வரை வசூலிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த திரையரங்குக்கு சென்ற வட்டாட்சியர், திரையரங்க உரிமையாளரிடம் புகார் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது திரையரங்கு உரிமையாளருக்கும், வட்டாட்சியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் தெறி திரைப்படக் காட்சியை ரத்து செய்து வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

சினிமா