தென்மராட்சியில் கடற்படை தளபதி நேரில் ஆராய்வு!

July 22, 2017

வடமராட்சிப் நாகர் கோவில் குடத்தனை வீதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற சிலரை கடலோர காவற்படையினர் மறித்து சோதனைக்குட்படுத்திய போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து கடற்படையினர் மணில் ஏற்றிச் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஆராய கடற்படைத் தளபதி இன்று அந்தப் பகுதிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 300 க்கும் அதிகமான கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

சம்பவத்தில் கடலோரக் காவற்படையினர் இருவர் படுகாயமடைந்த நிலையில் அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கடலோரக் காவற்படையினர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாட்டை பதிவு செய்தனர். இதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

ஈழத்தீவு