தென்னிந்திய நடிகர்களுக்கிடையிலான கிரிகெற் போட்டிகள் இன்று

April 17, 2016

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்


 சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த ஒருநாள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழ் சினிமா நட்சத்திரங்களைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட திரையுலகினரும் கலந்துகொள்கின்றனர்.

 போட்டிக்கு நடுவே திரை நட்சத்திரங்களின் நடனம், மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. ரஜினிகாந்துக்கு மரியாதை: மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

சினிமா