துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட அவுஸ்திரேலிய பெண்

November 06, 2016

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பிணைத்தொகைக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டு பெண்களை தீவிரவாதிகள் கடத்தும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த வகையில் ஜலாலாபாத் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண்ணான கெர்ரி ஜேன் வில்சன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரான காபுலில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாக பணியாற்றிவந்த மற்றொரு அவுஸ்திரேலிய பெண்ணும் கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்டார்.

இந்நிலையில் காபுலல் நகரின் மையப்பகுதியான கலா-இ-ஃபதுல்லா என்ற பகுதியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்த பெண்ணை நேற்று துப்பாக்கி முனையில் சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய நாட்டுப் பெண் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியா