தீவிரவாத தாக்குதல் 7 அமர்நாத் யாத்திரை பக்தர்கள் பலி!

July 10, 2017

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பேருந்து ஒன்றில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.  அந்த பேருந்து மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பக்தர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  12 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து உடனடியாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய 2 பட்டாலியன்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

உலகம்