தாய் டயானாவின் மரணம்: இளவரசர் ஹரி பரபரப்பு பேட்டி

April 17, 2017

டயானா உயிரிழந்த போது தான் அனுபவித்த மன வேதனைகள் குறித்து அவர் மகன் இளவரசர் ஹரி மனம் திறந்துள்ளார்.

பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் இறக்கும் போது அவரின் மகனான இளவரசர் ஹரிக்கு வெறும் 12 வயது தான்.

தனது தாய் இழப்பின் வலியை கடந்த 20 வருடங்களாக மனதில் சுமக்கும் ஹரி அதை பற்றி தற்போது பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், என் தாய் இறந்தவுடன் நான் உடைந்து போய் விட்டேன்.

 

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நான் பின்னர் அதிலிருந்து விடுபட மருத்துவ கவுன்சிலிங் சென்றேன்.

தாயின் இழப்பு பணி ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் என்னை பாதித்தது. அந்த சமயத்தில் எனக்கு யாரையாவது கோபத்தில் குத்த வேண்டும் என அடிக்கடி தோன்றும்.

இதை காரணமாக வைத்தே நான் குத்துச்சண்டை வகுப்பில் சேர்ந்தேன்.

எனது சகோதரர் வில்லியம் மற்றும் எனது நெருங்கிய சொந்தங்கள் ஆதரவாக இருந்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தாம் சரியான இடத்தில் இருப்பதாகவும் ஹரி தெரிவித்துள்ளார்.

 

 

ஐரோப்பா