தமிழக விவசாயிகளுக்காக லண்டனில் களமிறங்கவுள்ள தமிழர்கள்

April 01, 2017

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்காக, லண்டனில் உள்ள தமிழர்கள் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. பயிர்கள் அனைத்தும் கருகின.

இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பெருமளவில் ஆதரவுகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் லண்டனில் உள்ள தமிழர்கள் டெல்லியில் போராடு விவசாயிகளுக்கு ஆதரவாக, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு அங்கு உள்ள தமிழர்கள் அனைவரும் வரவேண்டும் என்றும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

ஐரோப்பா