தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது!

July 22, 2017

பருத்திதுறை வடகிழக்கில் நாகை மாவட்டத்தைச்சேர்ந்த  மீனவர்கள் எட்டு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாற்றின் பேரில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசாரணைகளுக்காக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணைகளுக்கு பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கடற்படை பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஈழத்தீவு