தன்னந்தனியாக விமானத்தில் உலகை வலம் வந்த 18 வயது இளைஞர்!

August 28, 2016

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்று அவுஸ்திரேலிய இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்த லக்லான் ஸ்மார்ட் என்பவர் தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார். அதன்படி மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து ஜூலை 24ஆம் திகதி ஸ்மார்ட் தனது பயணத்தைத் தொடங்கினார்.

இதையடுத்து 15 நாடுகளின் 24 இடங்களுக்குச் சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார். இதையடுத்து ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

18 வயது 7 மாதம் 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி ஸ்மார்ட், இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மாத் குத் மில்லர், உலகின் குறைந்த வயதில் தனியாக விமானத்தை ஓட்டி சாதனை புரிந்திருந்தார்.

இது குறித்து லக்லான் ஸ்மார்ட் கூறியதாவது, தாம் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும், இந்த தருணம் தமது வாழ்வில் மிகவும் மறக்க முடியாத தருணம் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தோனிசியா அருகே சென்று கொண்டிருந்த பொழுது தொலை தொடர்பு தகவல் சரியாக கிடைக்காததால் விமானம் மலை மீது மோதியிருக்கும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என தெரிவித்துள்ளார்.

இவர், 45000 கிலோ மீட்டர்கள் தூரத்தை 2 மாதங்கள் பயணித்து இச்சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா