ட்ரூடோவின் அமைச்சரவை மாற்றியமைக்கப் படுகின்றது.

January 11, 2017

ஒட்டாவா-இன்று பிற்பகல் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் சிறிது கலக்கலை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிபரல் ஆட்சிக்கு வந்த ஒரே ஒரு வருடத்தின் பின்னர் இந்த மாற்றம் இடம்பெறுகின்றது.
நாட்டின் அரசியல் இன்னல்களை சரிப்படுத்தவும் வாசிங்டனின் புதிய நிர்வாகத்திற்கு ஏற்ப அமைச்சரவையை தயார்படுத்தவும் இந்த மாற்றம் இடம்பெறுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

cab
புதிய மாற்றத்தின் பிரகாரம் கிறிஸ்ரியா விறிலான்ட் கனடாவின் புதிய வெளி விவகார அமைச்சராக நியமிக்கபடுவார்.

Foreign Affairs Minister Stephane Dion speaks with the media ahead of the Commonwealths Heads of Government meeting, Thursday Nov. 26, 2015 in Valletta, Malta. THE CANADIAN PRESS/Adrian Wyld

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Stéphane Dion அரசியலை விட்டு விலகி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனிக்கு கனடிய தூதராக நியமனம் பெறுகின்றார்.

குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலும் கூட அரசியலை விட்டு விலகி சீனாவிற்கான கனடிய தூதுவராக செல்கின்றார்.
புதிய அமைச்சர்களின் பதவி பிரமாணம் இன்று பிற்பகல் 2-மணிக்கு Rideau Hallல் இடம்பெறுகின்றது.
ஏனைய மாற்றங்களும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
François-Philippe Champagne-சர்வதேச வர்த்தக அமைச்சராக நியமனம் பெறுகின்றார்.
பெண்கள் நிலை அமைச்சர் பற்றி ஹஜ்டு தொழிலாளர் அமைச்சராகின்றார்.
மரியம் மொன்செவ் ஜனநாயக அமைப்புக்களிலிருந்து பெண்கள் நிலைக்கு மாற்றப்படுகின்றார்.
ஜனநாய அமைப்புக்களின் அமைச்சராக கரினா கவுல்ட் நியமிக்கப்படுகின்றார்.
Ahmad Hussan குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சராகின்றார்.

cab1
Ahmad Hussan கனடாவின் முதலாவது சோமாலி வம்சாவளி எம்பியாவார்.இவர் ஒரு வழக்கறிஞர்.ரொறொன்ரோ-யோர்க் தெற்கு-வெஸ்ரேன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.

ஒரு முன்னாள் வர்த்தக அபிவிருத்தி தொழிலாளியான 29வயது Gould பேர்லிங்டன் ஒன்ராறியோ தொகுதி எம்பியாவார். தனது முன்னய பதவியான நாடாளுமன்ற செயலாளர் பதவியிலிருந்து சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக பதவி உயர்வு பெறுகின்றார்.
கியுபெக் தொகுதியான Saint-Maurice–Champlain-முதல் கால எம்பியும் ஒரு முன்னாள் தொழிலதிபரும் வழக்கறிஞருமான Champagne நாடாளுமன்ற செயலாளர் பதவிக்கு ஒரு வலுவான செயல்திறனாளரென கருதப்பட்டு நிதி அமைச்சர் பில் மொனியோவின் பாராளுமன்ற செயலாளராக நியமனம் பெறுகின்றார்.

cabcab2cab3

Canadian Prime Minister Justin Trudeau (right) applauds Chrystia Freeland, the federal Minister of International Trade, as she is introduced at a news conference following their visit to the Centre for Commercialization of Regenerative Medicine in Toronto on Wednesday January 13, 2016. THE CANADIAN PRESS/Chris Young

 

கனடா