டொனால்டு டிரம்புக்கு கடும் நெருக்கடி

March 20, 2017

ஓபாமா மீது டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் டிரம்ப், ஒபாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீது பரபரப்பு குற்றசாட்டை வைத்தார்.

அதாவது, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் தான் தொலைபேசியில் பேசுவதை ஒபாமா ஆட்களை வைத்து கண்காணித்தார் என குற்றம்சாட்டினார்.

ஆனால், இதற்கான ஆதாரம் ஏதும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில் டிரம்ப் கட்சியை சேர்ந்த முன்னனி தலைவர்கள் சிலர் ஒபாமாவிடன் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆதாரம் ஏதும் இல்லாமல் குற்றம் சாட்டிய விடயத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க அதிகார சபை உறுப்பினர் Susan Collins கூறுகையில், டிரம்பை ஒரு ஜனாதிபதியாக ஆதரிக்கிறேன். ஆனால் அவர் இந்த விடயத்தில் தவறு செய்திருந்தால் அவர் பக்கம் நிற்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையில், வெள்ளை மாளிகை இந்த விடயத்திலிருந்து இன்னும் பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா