ஞானசார தேரருக்கு எதிரான பிடியாணை வாபஸ் – பிணையில் விடுவிப்பு!

June 21, 2017

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வழக்கில் ஆஜராகத் தவறியாமையின் காரணமாக ஞானசார தேரருக்கு எதிராகக் கடந்த 15ஆம் திகதி பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தனது சட்டத்தரணி ஊடாக கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போதே அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ் பெறப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஈழத்தீவு