ஜேம்ஸ்பாண்ட் பட இயக்குனர் கெய் ஹாமில்டன் காலமானார்

April 22, 2016

ஜேம்ஸ்பாண்ட் பட இயக்குனர் கெய் ஹாமில்டன்,93 காலமானார். பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஹாமில்டன், பிரிட்டனில் குடியேறினார். பிரிட்டன் திரையுலகில் துணை இயக்குனராக தனது வாழ்க்கை துவக்கி ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். 1980-களில் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் நடித்த லைவ் அன்ட் லட் டை, தி மேன் வித் கோல்டன் கன், மற்றும் சீன்கானேரி நடித்த கோல்ட்பிங்கர், டைமன் பார்வர் என 4 படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். ஹாமில்டன் மறைவுக்கு மாஜி ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சினிமா