சூரியனில் ஓம் எனும் சத்தம்!

February 01, 2016

சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருவதாக நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த “ஓம்” போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓம் எனும் ஒலி மனதை அமைதியாக உணரவும், மனநிலையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.

ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் செயற்கை கோளின் உதவியோடு, வெண்வெளியில் ஆயிரம் மைல்களுக்கு பரவியிருந்த பெரிய காந்த சூழல்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் அந்த அதிர்வுகளின் அளவை கணக்கிட்டு, அதை ஒலியாக மாற்றினர்.

சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் அந்த ஒலியானது ஏதோ இசையை போல இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதெல்லாம் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் என்பது இந்து மதம் சார்ந்த, பண்டைய காலத்தில் இருந்து ஆன்மீக ஒலியாக கருதப்படும் ஓர் சப்தம் ஆகும். ஹிந்து, ஜெயின், புத்த மதம், சீக்கியர்கள் போன்றவர்கள் “ஓம்” என்ற ஒலி உணர்வை கட்டுப்படுத்த, மேலோங்க வைக்க உதவும் சப்தமாக கருதுகிறார்கள்.

அடிப்படையில் “ஓம்” எனும் ஒலி மனதிற்கு அமைதியையும், மனநிலையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது என ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.

Videos: 
பலதும் பத்து