சீனாவில் பள்ளியில் பயங்கர குண்டு வெடிப்பு 7 பேர் பலி!

June 15, 2017

கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் ஒரு மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே ஓடி வந்தனர். அப்போது மாலை 4.50 மணியளவில் பள்ளியின் நுழைவு வாயிலில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.

இதில் 7 பேர் பலியாகி உள்ளதாகவும், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சீனா போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பள்ளியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மழலையர் பள்ளியில் குண்டு வெடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம்