சிறு வர்த்தகத்தை ஊக்குவிக்க - "Paris’Commerces"

February 18, 2016

பிரான்சு, பரிசின் மாநகரசபை முதல்வர் அன் இதால்கோ, பரிசின் சிறு வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்கான "Paris’Commerces" எனும் திட்ட அறிக்கையினை வெளியிடுகின்றார்.

பரிசில் பெரும் வர்த்தக நிறுவனங்களின் தனியாட்சி முறைமையைத் தவிர்க்கவும், பரிஸ் சிறு வரத்தகர்களை இழந்து, வெறுமையாகுவதைத் தடுக்கவும், வரத்தக நிலையங்களிற்கான கட்டங்கள் வெறுமையாகிக்கொண்டு வருவதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டத்தினை பரிஸ் மாநகரசபை முதல்வர் அன் இதால்கோ உருவாக்கி உள்ளார்.
 
சிறுவர்த்தகர்களை இழந்துவரும், பரிஸ் 12, 18, 20 மற்றும் பரிசின் மையப்பகுதியின் பரிஸ் 02, போன்ற பிரிவுகளின் மீதே முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.

புதிய சிறு வர்த்தகர்களையும், ஏற்கனவே சிரமத்திலுள்ள வரத்தகர்களையும் மாநகரசபை முதல்வர் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். இதனடிப்படையிலேயே இன்றைய திட்ட அறிக்கை வெளியிடப்படுகின்றது.

பரிசில் தற்போது மொத்தமாக 62,000 வர்த்தக நிலையங்கள் உள்ளன. இவற்றில் 13800 உணவகங்கள் மற்றும் அருந்தகங்களும் அடங்குகின்றன. 7200 சிறு வர்த்தக நிலையங்கள் இதில் அடங்கியிருந்தாலும், இன்னமும் பரிசில் 7600 வரத்தக நிலையங்களிற்கான கட்டடங்கள் வெறுமையாகவே, யாராலும் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் பரிஸ் மாநகரசபை குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய நிர்வாக நடைமுறைகள்