சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதகுரு கைது!

July 23, 2017

இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மதகுரு ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெகிராவ ஹோராபொல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 8 மற்றும் 9 வயது சிறுவர்கள் இருவரையே இவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரினால், இதற்கு முன்னர் பல சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஈழத்தீவு