சிங்கம், சிறுத்தைகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் இளம்பெண்...

August 11, 2016

சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ரோசனா அல் டீனி ( வயது 20) ஆர்வத்துடன் காட்டுமிருகங்களான சிங்கம் சிறுத்தை போன்றவைகளை வளர்த்து வருகிறார்.பூனை நாய்குட்டிகளை போன்று அந்த கொடிய மிருகங்களும் அவருடன் கொஞ்சி விளையாடுகின்றன.ரோசனாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் இது ஆபத்தானது என அவரிடம் பலமுறை எச்சரித்தனர். ஆனால் அவர் எந்த பயமும் இல்லாமல் சிங்கம் சிறுத்தைகளுடன் பழகி வருகிறார்.

இது குறித்து ரோசனா கூறியதாவது, எனக்கு நெருக்கமானவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் எனது அன்றாட வாழக்கை அவைகளுடனே கழிகின்றன.அதில் பெருமபாலனவர்கள் தங்கள மனதை மாற்றி கொண்டனர்.

இப்போது அவர்கள் தற்போது எனக்கு ஆதரவாகவே பேசுகின்றனர். அவர்கள் காட்டு விலங்குகள் அவர்களது எஜமானர்களுக்கு கட்டுபட்டு நடக்கும் தனமை கொண்டன என்பதை அறிந்து உள்ளனர். விலங்குகலுக்கு மனிதர்களைப்போல் மூளை கிடையாது இருந்தாலும் அவைகளுக்கு இதயமும் உணர்வுகளும் உள்ளன. என கூறினார்.

 

Videos: 
காணொளி / ஒலி