சாலை கடல் நீரேரி வற்றியுள்ளதால் தொழிலாளர்கள் தவிப்பு!

July 18, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன்,புதுமாத்தளன்,அம்பலவன் பொக்கணை,வலைஞர் மடம், இரணைப்பாலை,ஆனந்தபுரம்,தேவிபுரம்,சுதந்திரபுரம்,  வரையான பகுதியில் 2500 ற்கு மேற்பட்ட மக்கள் இந்த கடல் நீரேரியினை நம்பி வாழ்கின்றார்கள்.நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சாலை கடல்நீரேரியும் வற்றி உப்பு படிந்துள்ளது 

இதன் காரணமாக மீன்கள் உப்பில் முரண்டு மிதந்துள்ளது இதனை எடுத்து கருவாடாக மாற்றும் நடவடிக்கையிலும் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.a
ஏரியை நம்பிவாழ்கின்ற மக்கள் இந்த பகுதிக்கு பெண்கள்,சிறுவர்கள்,மற்றும் குடும்பம் குடும்பமாக சென்று எச்சியிருக்கும் மீன்களை பிடித்து தங்கள் பொருளாதாரத்தை போக்காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

விவசாயம் செய்கை பண்ணமுடியாத வாழ் நிலத்தில் இவர்கள் வாழ்ந்துவருவதால் மீன்பிடி தொழிலையே முழுமையாக நம்பி வாழ்வாதாரத்தினை கொண்டு செல்கின்றதை கொண்டுசெல்கின்றார்கள்.

கடல் நீர் வற்றியுள்ளதால் சாலை கடலை நம்பிதொழில் செய்த மீனவர்களின் வறுமை மேலும் நீடித்துள்ளது.2500 வரையான மீனவ குடும்பங்கள் இவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
 

ஈழத்தீவு