சார்லி சாப்ளின் போல் உடையணிந்த 662 ரசிகர்கள்: ஏன் தெரியுமா?

April 17, 2017

பிரபல கொமடி நடிகரான சார்லி சாப்ளினின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் வகையில் சுவிட்சர்லாந்து நாட்டில் 662 ரசிகர்கள் அவரைப் போல் உடையணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் சார்லி சாப்ளின் கடந்த 1889-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் திகதி பிறந்தார்.

இளம்வயது முதல் கொமடி செய்வதில் கில்லாடியான அவர் ஊமைப்படங்களில் அதிகளவில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

சார்லி சாப்ளினின் புகழ் உலகம் முழுவதும் பரவியதை தொடர்ந்து உலக திரைப்பட வரலாற்றில் சாப்ளின் நீங்காத இடம் பெற்றார்.

பின்னர், திரைப்படங்களில் இருந்து ஓய்வுப்பெற்ற சாப்ளின் சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறினார்.

Corsier-sur-Vevey பகுதியில் உள்ள வீட்டில் சாப்ளின் 25 ஆண்டுகள் வசித்து கடந்த 1977-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சார்லி சாப்ளினின் புகழை பரப்பும் வகையில் கடந்தாண்டு அவரது வீடு அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று சார்லி சாப்ளினின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் உடுத்தியது போன்ற ஆடைகள், தொப்பு உள்ளிட்ட அனைத்தையும் அணிந்தவாறு 662 ரசிகர்கள் சாப்ளினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு சாதனைப் படைத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

ஐரோப்பா