சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் ஐ.எஸ்!

June 10, 2017

ஈரானின் தெஹ்ரான் நகரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 17 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஈரானை தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என வீடியோ மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ தெஹ்ரான் தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. 

அந்த வீடியோவில் வரும் 5 முகமூடி அணிந்த பயங்கரவாதிகள்இ ஈரானுக்கு பிறகு உங்களுக்கான நேரமும் வரும். உங்களை உங்கள் இடத்திலேயே வந்து தாக்குவோம். நாங்கள் யாருடைய ஏஜண்டும் இல்லை. இறைவனுக்கு கட்டுப்பாட்டு அவருடைய உத்தரவின் பேரில் நடக்கிறோம். மதத்திற்காக தான் நாங்கள் போராடுகிறோம்.

 ஈரானுக்காகவோ சவுதி அரேபியாவிற்காகவோ அல்ல என சவுதி அரேபிய அரசை எச்சரித்துள்ளனர்.இதனையடுத்து சவுதி அரேபியாவில் பாதுகாப்பு பலப்பைத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உலகம்