'சந்தோச' நாராயணன்

January 24, 2016

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உயரத்துக்கு வந்த இரு இசையமைப்பாளர்கள் அனிருத்தும், சந்தோஷ் நாராயணனும்.  அனிருத் அதிரடியாக முன்னேறினார் என்றால் சந்தோஷ் நாராயணனின் வளர்ச்சி ஸ்டெடியானது. 
 
ரஜினியின் கபாலி படத்துக்கு இசையமைத்துவரும் சந்தோஷ் நாராயணன், பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்க உள்ளார். அத்துடன், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் கொடி படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மூன்றுமே பெரிய வாய்ப்புகள்.
 
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திற்கும் இசையமைக்க சந்தோஷ் நாராயணனை அணுகியுள்ளனர். அனேகமாக அவர் இந்த வாய்ப்பை ஒத்துக் கொள்வார் என்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை கௌதம் தயாரிக்கிறார்.
 
2016 -இல் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவரவிருக்கும் அனைத்துப் படங்களுமே முக்கியமானவை. இது சந்தோஷ் நாராயணனின் வருடம்

சினிமா