கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்கள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு கைதான கொலையாளி

December 24, 2016

அவுஸ்திரேலியா நாட்டில் இரண்டு இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்த 48 வயதான நபர் தான் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு இரவில் வெளியே சென்றிருந்த Jane Rimmer(23) என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது வீட்டில் இருந்து 45 கி.மீ தொலைவில் அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதேபோல் 1997-ம் ஆண்டு Ciara Glennon(27) என்ற பெண் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.

மேலும் இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதே வரிசையில், 1996-ம் ஆண்டு Sarah Spiers என்ற 18 வயதான பெண் காணாமல் போனார். ஆனால், இவரை தற்போது வரை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொலையாளி குறித்து தகவல் தரும் நபருக்கு 1,80,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகால விசாரணைக்கு பின்னர் தற்போது கொலையாளி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் மூன்றாவதாக காணாமல் போன பெண் குறித்து இதுவரை தகவல் இல்லாததால், அவரை தேடும் பணி தொடர்ந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா