குழு மோதலில் கைக்குண்டு தாக்குதல் 17 பேர் காயம்!

July 22, 2017

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் பிரதேசவாசிகள் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (21) இரவு ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவதாக பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளும் நிலையில், எம்பிலிபிட்டிய நோனாகம வீதியிலுள்ள வெட்டிய சந்திக்கு அருகில், கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மோதலை அடுத்து, குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் அவ்விடத்தில் கூடிய போதே குறித்த கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 17 பேர் காயமடைந்துள்ளதோடு, அதில் 14 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையிலும், 03 பேர் தங்காலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், அங்குணுகொலபெலஸ்ஸ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தீவு