கிராமத்தையே நடுங்க வைத்த சிறுத்தை: 6 பேரை இரத்த காவு வாங்கிய பயங்கரம்

February 27, 2017

இந்தியாவில் ஒரு கிராமத்தையே நடுங்க வைத்த சிறுத்தையை வன விலங்கு அதிகாரிகள் கஷ்டப்பட்டு போராடி பிடித்துள்ளனர்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் காட்டு சிறுத்தை நடமாடுவதாக அந்த ஊர் மக்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள் சிறுத்தையை கண்டறித்து அதை சுற்றி கூடினார்கள். மேலும், சிறுத்தையை பிடிக்க வரவேண்டும் என வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

 

ஆனால் அவர்கள் உடனே அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களே சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர்.

இந்த சமயத்தில் மக்கள் கூட்டத்தை கண்ட சிறுத்தை அதில் இருந்த ஆறு பேரை தாக்கியது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் மீன் பிடிக்கும் வலையை வைத்து சிறுத்தையை பிடிக்க மக்கள் போராடியுள்ளார்கள்.

சில மணி நேரம் கழித்து வன விலங்கு அதிகாரிகள் ஆயுதங்களுடன் அங்கு வந்து சிறுத்தையை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர்.

9 மணி நேரமாக சிறுத்தையை பிடிக்கும் போராட்டம் கடைசியில் முடிவுக்கு வந்தது.

 

 

 

 

உலகம்