காணாமல் போனவர்களின் அலுவலகத்தினை சர்வதேசமும், புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது என கனகரஞ்சினி யோகராசா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பாக தெரிவித்துள்ளார்!

July 21, 2017

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 152 ஆவது  நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்

“அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் எமது பிள்ளைகளின் பெயர் விபரப்பட்டியலினை வெளியிடுவதாக உறுதியளித்திருந்த நிலையில் இதுவரை எமக்கான தீர்வுகள் எதுவுமே கிடைக்கவில்லை.

எம்மையும் ஐக்கிய நாடுகள் சபையினையும் ஏமாற்றுவதற்கே இந்த அலுவலகம் அமைக்கப்படுவதுடன் இது ஒருபோதுமே எமக்கான தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை குறித்த அலுவலகம் அமைப்பதற்கு முன்னர் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதனை நாம் வலியுறுத்துகின்றோம்.

அதற்கு எமது போராட்டத்திற்கு உறவுகளும் ஊடகங்களும் துணைபுரிய வேண்டும்” என மேற்படி ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தீவு