கழுத்தறுத்து சரிந்த பாலியல் குற்றவாளி: கதிகலங்கிய நீதிமன்றம்

January 11, 2017

வேல்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கில் தண்டனை வழங்கப்பட இருந்த குற்றவாளி கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

33 வயதான Lukasz Robert Pawlowski என்ற நபரே நீதிமன்ற வளாகத்தில் வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் Lukasz Robert Pawlowski ஒரு கடையில் நுழைந்து ஊழியர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடக்க கடையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் ஆதாரமாக சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டிசம்பர் மாதம் Lukasz Robert Pawlowski குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேலும், தண்டனை இன்று அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளி கூண்டில் நின்றுக்கொண்டிருந்த Lukasz Robert Pawlowski தான் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கோரியுள்ளார்.

இதனையடுத்து, அவர் அனுதிக்கப்பட்டுள்ளார், பின்னர், குற்றவாளி கூண்டிற்கு திரும்பி Lukasz Robert Pawlowski கழுத்தை அறுத்துக்கொண்டு இரத்த வெள்ளத்தில் நீதிமன்ற வளாகத்தில் சரிந்துள்ளார்.

உடனே சம்பவயிடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் Lukasz Robert Pawlowskiக்கு முதல் உதவி அளித்துள்ளனர். பின்னர், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கீழே விழுந்த Lukasz Robert Pawlowski மயக்கமடைந்ததாகவும், அவர் நிறைய இரத்தம் இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தால் நீதிமன்ற வளாகம் பரபரப்பு அடைந்தது.

 

 

 

ஐரோப்பா