கர்ப்பிணியின் வயிற்றில் மரக்கட்டையை வீசிய கொரில்லா

March 08, 2017

கொரில்லா குரங்கு ஒன்று கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் மரக்கட்டையை தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் New Orleans பகுதியில் உயிரியல் பூங்காவிற்கு Sylvia Cressy (34) என்ற பெண் சென்றுள்ளார்.

6 மாத கர்ப்பிணியாக இருந்த இவர், அங்கு கொரில்லாவை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு மரக்கட்டையை எடுத்த கொரில்லா அதனை அப்பெண் மீது தூக்கிவீசியதில் அவரது தலையில் பட்டு வயிற்றில் விழுந்துள்ளது.

இதில், அவர் நிலைதடுமாறி மயங்கி விழுந்ததில் சுயநினைவை இழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வந்த இவர், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த போதிலும், இவருக்குள் இருக்கும் மனப்பயம் போகவில்லை.

வயிற்றில் இருக்கும் எனது குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அச்சத்துடனயே உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இதுபோன்ற மரக்கட்டைகள் விலங்குகளுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திகொடுப்பதற்காக அதன் கூண்டுக்குள் போடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளது.

 

கனடா