கரவெட்டிப் பிரதேச சபையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்

April 03, 2018

வடமராட்சி தெற்கு மேற்கு  கரவெட்டிப் பிரதேச சபையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது.

பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு இன்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட  தங்கவேல் ஐங்கரன்  11 வாக்குகளால் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு  எதிராகப்  சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்ப்பில் போட்டியிட்ட ச. இராமநாதனுக்கு 10 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

அதேவேளை  தமிழ் தேசியக் கூட்டமைப்பு   போட்டியிட்ட  கந்தர் பொன்னையா  உபதவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஈழத்தீவு