கனகபுரம் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து மூதாட்டி பலி!

August 02, 2017

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் சேவியர் கடை சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றின் மீது, பின்னால் சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது, 

இன்று (02) பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 77 வயதுடைய கருணாநிதி சின்னம்மா என்ற முதியவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஈழத்தீவு