ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 ரஷியப் பெண்களுக்கு ஆயுள் தண்டனை

April 30, 2018

ஈராக் நாட்டின் மோசூல் நகரை மையமாக கொண்டு அந்நாட்டில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திவந்தபோது இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் இந்த பயங்கரவாத கூட்டத்தில் சேர்வதற்காக ஆர்வக்கோளாறால் தங்களது நாடுகளில் இருந்து ஈராக்குக்கு வந்தனர்.

இப்படி வந்தவர்கள் மற்றும் உள்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள் என சுமார் 20 ஆயிரம் பேரை கைது செய்த ஈராக் அரசு அவர்களை சிறைகளில் அடைத்து வைத்துள்ளது. துருக்கி, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்துவந்த சுமார் 1400 பெண்கள் தண்டனையை எதிர்நோக்கி சிறைகளில் காத்திருக்கின்றனர்.

பாக்தாத்தில் உள்ள பெண்கள் சிறையில் மட்டும் ரஷியாவை சேர்ந்த 57 பெண்களும், அவர்களின் சுமார் 100 குழந்தைகளும் அடைபட்டு கிடக்கின்றனர்.

உலகம்