ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராகப் போரிட மேலும் ஆயிரம் அமெரிக்க வீரர்கள்!

March 09, 2017

சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடும் யுத்தத்தை ஆரம்பித்திருக்கும் அமெரிக்க ஆதரவு கூட்டுப் படைக்கு மேலும் ஆயிரம் இராணுவ வீரர்களை அனுப்ப ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள் குவைத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவர்களைக் களமிறக்கவுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

யுத்த களத்தில் ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னரங்கு படையணைத் தலைவர்கள் இந்த வீரர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றும், அங்கு ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதற்கட்ட நடவடிக்கைகளுள், ஐ.எஸ். இயக்கத்தைப் பூண்டோடு அழித்துவிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முக்கியத்துவம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1_US_Special_Force

 

கனடா