என்னை கற்பழித்து கொலை செய்து விடுவார்கள் என பயந்தேன் : பிரபல நடிகை பகீர் பேட்டி

March 20, 2017

என் வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள் என்னை கற்பழித்து கொலை செய்து விடுவார்கள் என பயந்தேன் என பிரபல நடிகையும், மொடலுமான கிம் கர்தாஷியன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பிரபல நடிகையாகவும், மொடலாகவும் இருப்பவர் கிம் கர்தாஷியன். இவர் போன வருடம் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி தனது பாரீஸ் வீட்டில் இருந்தார்.

அப்போது அவர் வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை கட்டி போட்டு வீட்டிலிருந்த பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

பின்னர், இதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை பொலிசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து கிம் கர்தாஷியன் முதல் முறையாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், வீட்டில் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவன் என் கை, கால், வாய் ஆகியவைகளை கட்டி போட்டு கட்டில் அருகில் தள்ளினான்.

அதனால் அவன் என்னை கற்பழித்து பின்னர் வைத்திருந்த துப்பாக்கியால் என்னை சுட்டு விடுவான் என நினைத்து பயந்தேன்.

நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை என தனது திகில் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

 

கனடா