உலகப் போரில் நாட்டுக்காக பணியாற்றிய பிரபல மொடல் அழகி கோர மரணம்

April 29, 2018

அமெரிக்க முன்னாள் மாடல் அழகியான ரெபாக்கா ஜேனிம் தனது முதுமைக்காலத்தில் டெமிண்டியா பிரச்சினையால் அவதியுற்று ஜார்ஜியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்றுவரும்போது அங்குள்ள பலருக்கும் சிரங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. ரெபாக்காவுக்கு அது தொற்றிக்கொண்டது.

மருத்துவமனை நிர்வாகம் சரிவர கவனிக்காததால் ரெபாக்காக்கு சிரங்கு உடல் முழுவதும் பரவி அந்நோயை உண்டு பண்ணும் நுண் பூச்சிகளால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

அவரது கைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது கையைத் தொட வேண்டாம் என்றும் தொட்டால் ஒரு வேளை கை கழன்று விழுந்து விடும் என்றும் நர்ஸ்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது ரெபக்காவின் குடும்பத்தினர் வழக்கு பதிந்துள்ளனர்.

ரெபக்காவின் உடலை பரிசோதித்த தடயவியல் நோய் நிபுணர் ஒருவர் தன் வாழ் நாளில் இதுபோன்ற கோர மரணத்தைக் கண்டதில்லை என்றும் அவர் இறக்கும்போது மிகுந்த வேதனையுடனேயே இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரெபக்காவை இந்த நிலையில் விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் எங்கு சென்றார்கள்இ ஏன் அவர்கள் அவரது நோயைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் கேள்விகளை ஊடகங்கள் எழுப்பியுள்ளன.

உலகம்