ஈராக்கில் ஜ.எஸ். உள்ளூர் தளபதிகள் 3 பேர் பலி

June 25, 2017

மொசூல், திக்ரிஸ் ஆற்றின் கிழக்கு கரையில், மொசூல் நகருக்கு எதிரே உள்ள தால் அபார் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தளபதிகள் பதுங்கி இருந்து, ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பதாக ஈராக் ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த குறிப்பிட்ட இடத்தை குறிவைத்து போர் விமானம் ஒன்று குண்டு வீச்சு நடத்தியது.  இதில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3 பேரும் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகம்