இளவரசர் ஹரியின் நிஜ தந்தை இவரா? மர்மம் விலகியது

March 13, 2017

பிரித்தானியாவின் இளவரசர் ஹரியின் தந்தை நான் இல்லை என டயானாவின் முன்னாள் காதலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா இளவரசியான மறைந்த டயானா கடந்த 1992ல் தனது கணவர் சார்லஸுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார்.

பின்னர் ஆயுள் கூட்டு அலுவலராக அப்போது வேலை செய்து வந்த James Hewitt என்பவருடன் டயானாவுக்கு தொடர்பு ஏற்ப்பட்டது.

James க்கும் டயானாவுக்கும் பிறந்தவர் தான் ஹரி என பல சமயம் மீடியாக்களில் கிசுகிசுக்கப்படுவதுண்டு.

இதற்கு தற்போது 58 வயதாகும் James Hewitt விளக்கமளித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,நீங்கள் தான் ஹரியின் தந்தையா என Jamesடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, நான் ஹரியின் தந்தை கிடையாது என James பதிலளித்தார்.

பிறகு ஏன் தொடர்ந்து இப்படியான செய்தி வருகிறதென நிரூபர் கேட்க, பத்திரிக்கை வியாபாரமாக அப்படி செய்திகள் போடுகிறார்கள் என கூறியுள்ளார்.

ஹரி பிறந்து 2 வருடங்களுக்கு பின்னரே டயானாவுக்கும், எனக்கும் தொடர்பு ஏற்ப்பட்டது என முன்னர் James கூறியது குறிப்பிடத்தக்கது.

 

ஐரோப்பா