இருவரின் உயிரை பறித்த அசுர வேகம்: சாலையில் நிகழ்ந்த பயங்கரம்

April 10, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் அசுர வேகத்தில் சென்ற லொறி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் இளம்பெண் உள்பட இருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள Lausanne நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் 25 வயதான ஆண் மற்றும் 23 வயதான பெண் ஆகிய இருவர் சாலையில் நடந்துச் சென்றுள்ளனர்.

பாதசாரிகள் நடந்துச் செல்லும் பாதையில் இருவரும் சென்றபோது தூரத்தில் ஒரு லொறி அசுர வேகத்தில் வந்துள்ளது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லொறி ஓரமாக நடந்துச் சென்ற அந்த இரண்டு பேர் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர்.

இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் மயக்கமுற்று விழுந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப்பி வைத்தனர்

மேலும், மயக்கமுற்ற நபர்களுக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்துள்ளனர்.

பொலிசார் தொடங்கிய விசாரணையில். 60 வயதான நபர் ஓட்டிய லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இளம்பெண் உள்பட இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பா