இந்திய வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை அளிக்க சுவிஸ் அரசு முடிவு

April 17, 2017

இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை அளிக்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பு செய்து முறைகேடாக ஈட்டிய பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை அளிக்க வேண்டும் என சுவிஸ் அரசுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை எதிர்வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அந்நாடுகளின் அரசிடம் ஒப்படைக்கப்படும் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

22 நாடுகளின் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், அண்டோரா, அர்ஜெண்டினா, பார்படோஸ், புரூண்டி, பிரேசில், பிரிட்டிஸ் வெர்ஜின் தீவுகள், சிலி, கிரீன்லாந்து, இஸ்ரேல், மொரீசியஸ், மெக்ஸிகோ, மொனோக்கோ, நியூஸிலாந்து, சான் மரினோ, தென் ஆப்பிரிக்கா, உருகுவே உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

மேலும், இந்நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த திகதி, முகவரி, சுவிஸ் வங்கி கணக்குகளின் எண்கள், சுவிஸில் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவதற்கான எண்கள், தற்போது வங்கியில் உள்ள இருப்பு தொகை, சுவிஸ் வங்கியில் இணைந்தபோது கணக்கில் செலுத்திய தொகை உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பா