ஆளில்லா விமானம் மூலம் வெடி குண்டு வெடிக்கத்திட்டம்

April 04, 2018

ரஷ்யாவில் 2018ம் ஆண்டுக்கான உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது. இன் நிலையில் இன் நிகழ்வு நடக்கவுள்ள மைதானத்தின் மீது வானில் இருந்து குண்டைப் போட ஐ.எஸ் தீவிரவாதிகள் பெரும் திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பல நாடுகளை ரஷ்யா அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வரும் இந்த நேரத்தில். ரஷ்யாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளார்கள்.

சிறிய ஆளில்லா விமானம் ஒன்றில் வெடி குண்டு ஒன்றை கட்டி, மைதானம் மேல் பறக்கவைத்து அக் குண்டை நிலத்தில் வீழ்த்தி வெடிக்கவைப்பது தான் அவர்களின் திட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டமா ? அல்லது சில மேற்குலக நாடுகளின் உளவு நிறுவனத்தின் திட்டமா என்பது தான் கேள்வி.

இன் நிகழ்வில் இப்படி ஒரு சிறிய சம்பவம் நடந்தால் கூட, பல வருடங்களுக்கு ரஷ்யாவில் எந்த ஒரு சர்வதேச நிகழ்வுகளையும் நடத்த வெளிநாடுகள் ஒத்துக் கொள்ளாது. அத்தோடு ரஷ்யாவுக்கு இது பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும். எனவே அமெரிக்கா அல்லது பிரிட்டனின் உளவு நிறுவனங்கள் இது போன்ற டபுள் ஏஜன் வேலையைச் செய்யலாம். இல்லையென்றால் இது நடப்பத்தை தடுக்காமல் விட்டு விடலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் பிரித்தானியர்கள் பலர் இதில் கலந்துகொள்வது இல்லை என முடிவெடுத்து விட்டார்கள். இதனாஅல் என்ன நடந்தாலும் பிரிட்டனுக்கு பாதிப்பு இல்லை.

உலகம்