ஆரம்பமானது உலக அழிவு? அச்சத்தில் உலகம்

April 17, 2017

வானத்தைப் பார்த்து அதில் உள்ள சூன்யங்களைத் தேடி அவை சூட்சமமாக கணிக்கப்படும்.

இந்தக் கணிப்புகளைக் கொண்டு எதிர்காலம் இப்படித் தான் இருக்கும் என்ற வகையில் எதிர்வு கூறுவது சோதிடம் எனவும் கூறலாம்.

கடவுளை நம்பாதவரும் கூட இந்த சோதிடத்தை நம்புவார்கள் அந்த அளவு சிறப்பானது இந்த கணிப்பு எதிர்வுகூறல்.

இப்படியாக எதிர்காலத்தைக் கணித்து எதிர்வுகூறுவதில் இன்று வரை விசித்திர நபராக இருக்கின்றார் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ்.

இவர் 1555ஆம் ஆண்டுகளில் கணித்து எதிர்வு கூறியது இன்றுவரை அச்சு பிசகாமல் நிறைவேறிக் கொண்டு வருகின்றது. அந்தவகையில் ஓர் தீர்க்க தரிசியாகவே இவர் வர்ணிக்கப்படுகின்றார்.

அமெரிக்க அதிபர் மாற்றம் போன்றவை உட்பட பலவற்றை சரியாக கணித்துக் கூறியவர் உலக மாற்றம், அழிவு தொடர்பிலும் தெளிவாக கணித்துள்ளார்.

இந்த கணிப்பே தற்போது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நடக்காது என்று புறந்தள்ளி விட முடியாத அளவு இவருடைய கணிப்புகள் அமைந்துள்ளன.

2016ஆம் ஆண்டு முதல் இயற்கைப் பேரிடர்கள், கடல் கொந்தளிப்புகள், நில நடுக்கங்கள் வெள்ளப்பெருக்குகள் அதிகம் ஏற்படும் எனக் கூறியவை நடைபெற்றன, தொடர்ந்தும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.

வரலாறு காணாத வகையில் காலநிலை உலகை அச்சுறுத்திக் கொண்டும் இருக்கின்றது. அத்தோடு துருவப் பகுதிகளின் உருகல் அதிகரிக்கும் என இவர் கூறிய கணிப்பு சரியாக நடக்கின்றது.

இப்படி இவர் கூறியவற்றில் முக்கியமானது 2017ஆம் ஆண்டு தொடக்கம் உலகம் பாரிய அழிவுகளைச் சந்திக்கும் என்பதே. அடுத்த உலக யுத்தம் ஆரம்பமாகும், அது உலக அழிவுக்கு வித்திடும் என்பதும் இவரது கணிப்பு.

அத்தோடு மத்திய கிழக்கு பற்றி எரியும் என்பதும், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதும் நாஸ்டிரடாமஸ் 400 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்தவை.

அவர் கூறியது போலவே இப்போதைய நிலவரத்தில் முன்றாம் உலக யுத்தம் ஏற்படும் சாதகத்தன்மை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அமெரிக்கா இந்த விளையாட்டை ஆரம்பித்து விட்டது.

ஆனால் அமெரிக்காவிற்கு ஏனைய நாடுகள் அடிபணிந்து போனது என்னமோ பழைய கதை. தற்போது நீ தாக்கினால் நான் நொருக்குவேன் என்ற பாணியில் பயணிக்கின்றன ஏனைய நாடுகள்.

சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே போர்ச் சூழல் வலுப்பெற்று கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தினை நிறுத்தும் அளவு சர்ச்சை வளர்ந்து விட்டது.

இடையே அமெரிக்கா வட கொரியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்கின்றது. வட கொரியாவும் அணு மூலம் திருப்பித் தாக்குவோம் என்று பதிலடி கொடுத்து வருகின்றது.

ஒருவேளை அமெரிக்கா வட கொரியாவிற்கு இடையே போர் மூண்டால் சீனா என்ன செய்யும் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது. காரணம் சீனாவின் எதிர்பார்ப்பு அமெரிக்காவின் இடம் தன் வசமாக வேண்டும் என்பதே.

மற்றொரு பக்கம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதலின் விளைவு ரஷ்யா அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவும் தயாராகி விட்டது. அதனால் ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது என்ற 'ஹாட்லைன்' உறுதியும் இப்போது இல்லாமல் போய் விட்டது.

மற்றொரு பக்கம் ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகளை காரணம் காட்டி அமெரிக்கா தன் போர் விளையாட்டை கண் மூடித்தனமாக ஆரம்பித்து விட்டது. இந்த போர்ச் சூழலுக்கு பதில் மத்திய கிழக்கு கூடிய விரைவில் பற்றி எரியும்.

இது நாஸ்டிரடாமஸ் கணிப்பு படியே இருக்கின்றது என்பது மிகப்பெரிய ஆச்சரியமே. அத்தோடு அடுத்த உலக யுத்தம் ஏற்படும் என்று கூறிய இவருடைய கணிப்பு சாத்தியப்படும்.

அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்கா விளையாடினால் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற காத்திருக்கும் சீனா, ரஷ்யா, வட கொரியா உட்பட அனைத்தும் அமெரிக்காவிற்கு ஆயுதங்கள் மூலம் பதில் கூறும்.

இப்படி மாறி மாறி போர் செய்து கொள்வதற்காகவோ தெரியவில்லை சக்தி வாய்ந்த ஆயுதங்களும். அணு ஆயுதங்களும் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் முடிவு கட்டாயம் மூன்றாம் உலக யுத்தம் ஏற்படும் சாத்தியக் கூறே அதிகம். இதனை எப்படி 400 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கணித்தார் என்பது இப்போதைக்கு வியப்பு.

ஆனாலும் இந்தப் போர்ச் சூழலை உலக அமைதி அமைப்புகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது எந்த வகையிலும் நல்லதல்ல.

ஆக அடுத்த உலக யுத்தம் ஏற்படுமா? தீர்க்க தரிசி நாஸ்டிரடாமஸ் கூறியது ஏனையவற்றைப் போல பலித்து விடுமா? உலக அழிவு சாத்தியமா? அச்சத்தில் உள்ள உலக மக்களுக்கு தீர்வு என்ன? விடைகளும் பெரிய கேள்விக்குறியே.

உலகம்