ஆப்கன் வாக்குப்பதிவு மையத்தில் குண்டு வெடிப்பு;31 பேர் பலி

April 22, 2018

ஆப்கானிஸ்தானின் காபூலில் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தீவிரவாதி ஒருவன் இன்று தற்கொலை குண்டு வெடிப்பு நிகழ்த்தினார். இத்தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்நாட்டில் தாலிபன் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உலகம்